search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவிட் மில்லர்"

    குயின்டான் டி காக்கின் அபார சதத்தால 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #SAvSL
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வாண்டர் டஸ்சன் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

    அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.



    இதை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் நாளை மறுதினம் போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.
    3-வது ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ், டேவிட் மில்லர் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்கிராம் 32 ரன்னில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 15.3 ஓவரில் 55 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.



    4-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். சதம் அடித்த டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருவரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    ×